குரங்குக்கு பயந்து ஊரைகாலி செய்த பொதுமக்கள்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு ஊராட்சிக்கு உட்பட்டது தென்னலக்குடி கிராமம் உள்ளது.

Update: 2019-01-31 20:20 GMT
நாகை, 

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு ஊராட்சிக்கு உட்பட்டது தென்னலக்குடி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக வெறிபிடித்து சுற்றித்திரியும் குரங்கு ஒன்று சாலையில் நடந்து செல்பவர்களையும், வீட்டில் இருப்பவர்களையும் விரட்டி, விரட்டி கடித்து வருகிறது. மேலும் அங்குள்ள நாய், கன்றுக்குட்டி, ஆட்டுக்குட்டி உள்ளிட்ட கால்நடைகளையும் கடித்து குதறி வருகிறது.

இதுவரை குரங்கு கடித்து 30-க்கும் மேற்பட்டோர் சீர்காழி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த

குரங்கை பிடிக்க வனத்துறையினர் கடந்த சில வாரங்களாக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனாலும் குரங்கு சிக்கவில்லை. பொதுமக்களை கடித்து குதறியது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் தங்களது வீட்டை காலி செய்து, தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுடன் வேறு ஊருக்கு குடிபெயர்ந்தனர். இதனால் அந்த ஊர் வெறிச்சோடி காணப்படுகிறது. அங்கு வசித்து வரும் ஒரு சிலரும் எந்த நேரத்தில் அந்த குரங்கு வந்து தங்களை தாக்குமோ? என்று அச்சத்துடனே உள்ளனர். ஒரு குரங்குக்கு பயந்து ஊரே காலியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்