அமைதி ஊர்வலம் சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர்- துணை முதல்வர் மலர்தூவி மரியாதை
சென்னை அண்ணா சாலையில் இருந்து மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அதிமுகவினர் அமைதி ஊர்வலம் சென்று நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை,
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள்,கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து அண்ணா சிலை அருகே தொடங்கி வாலாஜா சாலை வழியாக அமைதி ஊர்வலமாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர்கள்,கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
பின்னர் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.