டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் நிச்சயமாக சந்தித்திருக்கமாட்டார் - கே.பி.முனுசாமி

டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் நிச்சயமாக சந்தித்திருக்கமாட்டார் என அ.திமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கூறினார்.

Update: 2018-10-05 07:32 GMT
சென்னை

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று பேட்டி அளிக்கும் போது, 

திகார் சிறையில் இருந்து விடுதலையான என்னை ஓபிஎஸ், 2017 ஜூலை மாதம் சந்தித்தார்!  2017 ஜூலை 12-ல் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோளின்படி, அவரை சந்தித்தேன் . எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தது தவறு என சந்திப்பின்போது ஓபிஎஸ் கூறினார். முதல்வர் பழனிசாமியை  பதவியில் இருந்து இறக்க தயாராக இருப்பதாக கூறினார். எங்கள் சந்திப்பில் சில ரகசியங்கள் இருப்பதால், அதனை ஓபிஎஸ் மறுக்க மாட்டார்.  என கூறி இருந்தார்.

இது குறித்து பேட்டி அளித்த அ.திமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி  

டிடிவி தினகரனை-  ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து இருக்க வாய்ப்பு இல்லை.  டிடிவி தினகரன்  பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறார். அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக தினகரன் இவ்வாறு பேசி வருகிறார். தினகரனும் சசிகலா குடும்பமும் வந்தேறிகள்; அவர்களை வெளியேற்றவே ஓ.பி.எஸ் தர்மயுத்தம் தொடங்கினார். என கூறினார்.

அ.திமுக மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூறும் போது  டிடிவி தினகரன்  பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறார். 

 

மேலும் செய்திகள்