தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
சென்னை,
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டது. மறுமதிப்பீட்டின்போது மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் போட்டு லஞ்சம் பெற்றுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா மற்றும் பேராசிரியர்கள் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2 பேரிடம் விசாரணை
இந்த வழக்கு சம்பந்தமாக நேற்று அண்ணா பல்கலைக் கழக உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவக்குமார் ஆகியோர் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் தலைமை அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணை விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிடவில்லை. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மற்றவர்களிடமும் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.