நீட் தேர்வில் தவறான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் கிடைக்க நடவடிக்கை டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தோவில் சுமார் 25,000 மாணவாகள் தமிழ் மொழியில் எழுதியுள்ள நிலையில், கேட்கப்பட்ட கேள்விகளில் 66 பிழைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
சென்னை,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தோவில் சுமார் 25,000 மாணவாகள் தமிழ் மொழியில் எழுதியுள்ள நிலையில், கேட்கப்பட்ட கேள்விகளில் 66 பிழைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவாகளுக்கு 196 மதிப்பெண்கள் பாதிக்கப்படுகிறது. இப்படி பாதிக்கப்படுமானால் தமிழ் மொழியில் படித்த அரசு பள்ளி மாணவாகள் மருத்துவ கல்லூ£யில் சேருவதற்கான வாய்ப்பு நிச்சயமாக குறைவு.
எனவே தமிழக அரசு, மாணவாகள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பிரதமரை சந்தித்து இந்த தவறான கேள்விகளுக்கான முழுமதிப்பெண்கள் தமிழகத்து மாணவாகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவவாறு அதில் கூறப்பட்டுள்ளது.