கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்களை மறித்து பயணிகள் போராட்டம்

ரயில்கள் தாமதமாக வருவதாக கூறி கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்களை மறித்து பயணிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2018-05-09 05:31 GMT
திருவள்ளூர்

சென்னை அரக்கோணம் மார்கத்தில் தொடர்ந்து ரயில்கள் தாமதமாக வருவதால் தினமும் சிரமங்கள் ஏற்படுவதாக கூறி கடம்பத்தூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, பயணிகள் ரயில் தண்டவாளத்தில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சப்தகிரி, ஜோலார்பேட்டை விரைவு ரயில்களை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்களை மறித்து பயணிகள் போராட்டம் நடத்தினர். அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணியால் ரயில்கள் தாமதம் என ரயில்வே நிர்வாகம் கூறி உள்ளது.

மேலும் செய்திகள்