பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறிஉள்ளார். #BanwarilalPurohit
சென்னை,
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களிடம் பேசுகையில், பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் சட்டவிதிகளின்படியே, சந்தானம் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அதிகாரி சந்தானம் அறிக்கை சமர்ப்பித்த பின்னரே சி.பி.ஐ விசாரணை குறித்தெல்லாம் முடிவு செய்ய முடியும். இப்போது அதற்கான அவசியம் கிடையாது. பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக விதிகளின் படி ஆளுநரே அதன் வேந்தர் ஆவார். அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநரே மாநிலத்தின் தலைவர். பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் காவல்துறையினரின் விசாரணை தொடரும்.
நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். பல்கலைக்கழக செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருகிறேன். பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை கேட்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் 5 பேர் கொண்ட குழுவை நியமித்தது. பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு பெண் உறுப்பினர்கள் தேவையென்றால், விசாரணைக்குழு எடுத்துக்கொள்ளலாம். ஒளிவுமறைவற்ற விசாரணை நடைபெறும் என்றார்.