உலகெங்கும் வாழும் தமிழ்மக்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்-கமலஹாசன்

உலகெங்கும் வாழும் தமிழ்மக்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார். #KamalHaasan

Update: 2018-04-13 15:03 GMT
சென்னை,

இது தொடர்பாக கமலஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

உலகெங்கும் வாழும் தமிழ்மக்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். அண்ணல் அம்பேத்கர் பிறந்த இந்நன்னாளில் அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழி நடப்போம் என உறுதி மொழி ஏற்போம்.

மத்திய, மாநில அரசுகளும் அரசியல் சாசனத்தை பின்பற்றி, தமிழர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று முழுங்குவோம். தமிழர் தமிழால் இணைவோம் நாளை நமதே!  என பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்