ஆணையத்தில் தெரிவித்த தகவல்களை வெளியே கூற முடியாது -ஜெயலலிதாவின் தனி பாதுகாவலர்

விசாரணை ஆணையத்தில் தெரிவித்த தகவல்களை வெளியே கூற முடியாது என ஜெயலலிதாவின் தனி பாதுகாவலர் வீரப்பெருமாள் தெரிவித்து உள்ளார். #JayaDeathProbe #InquiryCommission

Update: 2018-03-27 09:50 GMT
சென்னை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

 30-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை கமிஷன் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.

இவர்கள் அளித்த வாக்குமுலம் அனைத்தும் விசாரணை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சசிகலா தரப்பில் அவரது வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதாவின் தனி பாதுகாவலரான வீர பெருமாள் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தது. அதை ஏற்று இன்று காலை 10.15 மணிக்கு வீரபெருமாள் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது நீங்கள் செய்த பணிகள் என்ன? எத்தனை நாட்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றீர்கள்? எவ்வளவு நேரம் அங்கு இருந்தீர்கள்? என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.  இதற்கு அவர் சொன்ன பதில்கள் அனைத்தும் வாக்கு மூலமாக பதிவு செய்தனர். 

விசாரணை முடிந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

விசாரணை ஆணையத்தின் அனைத்து கேள்விகளுக்கும் உரிய பதில் அளித்துள்ளதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான பின் ஜெயலலிதாவின் தனி பாதுகாவலர் வீரப்பெருமாள் தெரிவித்துள்ளார். மேலும் ஆணையம் தன்னிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தியது என்றும் ஆணையத்தில் தெரிவித்த தகவல்களை வெளியே கூற முடியாது என்றும் வீரப்பெருமாள் கூறினார். 

மேலும் செய்திகள்