குஜராத் தேர்தல் முடிவு: நடிகை குஷ்பு கருத்து

குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றாலும் அந்த கட்சிக்கு காங்கிரஸ் கடும் போட்டியை கொடுத்துள்ளது.

Update: 2017-12-18 18:45 GMT
சென்னை,

குஜராத் தேர்தல் முடிவு குறித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–

‘‘குஜராத் தேர்தலில் ராகுல் காந்தி, தனி மனிதராக பா.ஜனதாவின் ஒட்டு மொத்த ராணுவத்தையும் எதிர்த்து நின்றார். இதன்மூலம் பா.ஜனதாவின் தூக்கத்தை காங்கிரஸ் கட்சி கெடுத்து இருக்கிறது. அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்து இருக்கிறோம். இது ஒரு நல்ல தொடக்கம்.’’

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்