முதலாம் ஆண்டு நினைவு தினம்: மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் அஞ்சலி
முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை,
தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த வருடம் செப்டம்பரில் உடல் நல குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ந்தேதி அவர் மரணமடைந்து விட்டார்.
இந்த நிலையில் அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை அடுத்து சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகளுடன் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.