தமிழ் மொழியில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை நடத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்மொழியில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை நடத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசால் நடத்தப்படும் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களுக்கான ஐ.ஐ.டி கூட்டு நுழைவுத்தேர்வுகள் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக அடுத்த ஆண்டும் குஜராத்தி மொழியில் நடத்தப்படவுள்ளது. தமிழ் மொழியிலும் அத்தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப் பட்டு வரும் நிலையில் அதை ஏற்க மத்திய இடைநிலை கல்வி வாரியம் மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.
ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுகளை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது குறித்து சென்னை ஐகோர்ட்டு, பா.ம.க.வின் கோரிக்கையை மத்திய அரசும், தேர்வு நடத்தும் முகமைகளும் ஆய்வு செய்து சாதகமான முடிவெடுக்க வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால், மத்திய அரசு இதுவரை ஏற்கவில்லை. தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி பெறும் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் முதன்மையானது வேற்று மொழியில் தேர்வு எழுதுவதாகும். மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வை அவர்களின் தாய்மொழியில் நடத்துவது தான் முறையானதாக இருக்கும்.
ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு தமிழில் நடத்தப்படாததற்கு மத்திய அரசை மட்டும் குறை கூற முடியாது. இந்த விஷயத்தில் மாநில அரசும் துரோகம் இழைத்திருக்கிறது. நுழைவுத்தேர்வுகள் மட்டுமின்றி, போட்டித்தேர்வுகளாக இருந்தாலும், ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக இருந்தாலும் தமிழுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. இந்திய அரசு அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து நடப்பதாக இருந்தால் ஐ.ஐ.டி உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகள், போட்டித்தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அனைத்து எட்டாவது அட்டவணை மொழிகளிலும் நடத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.