மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் பயணம்

மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் பயணம் மேற்கொள்வதாக தே.மு.தி.க. கட்சி தலைமை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2017-11-25 17:21 GMT
சென்னை, 

தே.மு.தி.க. கட்சி தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது வழக்கம்.

அதேபோல், இந்த ஆண்டும் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்காக ஒரு வாரத்திற்குள் செல்ல இருக்கிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்