உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயார்: அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க கட்சி தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறியுள்ளார்.

Update: 2017-11-08 04:18 GMT
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களிலும் நீர்தேங்கி சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. சென்னையில் பல பகுதிகளிலும் தேங்கிய நீர் வெளியேற்றப்படாமல் உள்ளது. இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் குண்டும் குழியும் ஆக உள்ள சாலைகள் சீர் செய்யப்படும் என கூறினார்.

தொடர்ந்து அவர் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க கட்சி தயார் நிலையில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்