போலி வாக்காளர்களை சேர்க்கவிடாமல் அ.தி.மு.க.வினரை தடுக்க வேண்டும் தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
2 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாம்களில் அ.தி.மு.க.வினரை, போலி வாக்காளர்களை சேர்க்கவிடாமல் தடுக்க வேண்டும் என்று தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஜனவரி 1-ந்தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 15 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
தி.மு.க.வுக்கு செல்வாக்குள்ள வாக்குச் சாவடிகளில் வழக்கம்போல் போலி வாக்காளர்களை சேர்க்கும் சதித்திட்டம் தீட்டப்பட்டு, அதற்கேற்ப அ.தி.மு.க. நிர்வாகிகளும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக சில செய்திகள் எனக்கு வருகின்றன.
இதை மனதில் கொண்டு, தி.மு.க. நிர்வாகிகள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, 3-10-2017 முதல் 31-10-2017 வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும் மற்றும் பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் மனுசெய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கால அவகாசத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதுதவிர, நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் 8-10-2017 மற்றும் 22-10-2017 ஆகிய 2 நாட்களில் நடத்தப்படவுள்ளன. இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம்மாறிய வாக்காளர்களும் 1-1-2018 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும், தங்கள் பெயர்களை சேர்க்க நீக்க திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களைப் பெற்று, பூர்த்திசெய்து, அந்தப் படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் தி.மு.க. வாக்காளர்கள் ஒருவர்கூட விடுபடாமலும், அ.தி.மு.க.வினர் போலி வாக்காளர்கள் எவரையும் சேர்த்துவிடாமலும், முன்னெச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.