கோவையில் பெண் எஸ்.ஐயிடம் தவறாக நடந்த புகாரில் போலீஸ் உயர் அதிகாரியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவு

கோவையில் பெண் எஸ்.ஐயிடம் தவறாக நடந்த புகாரில் உதவி ஆணையரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2017-09-06 14:00 GMT
சென்னை,

கோவையில்  நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார்  முயற்சி எடுத்தனர். 

அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது  கூட்டத்தை கட்டுபடுத்தும் சாக்கில்  போலீஸ் அதிகாரி ஜெயராமன் தனது ஜூனியர், பெண் சப் இன்ஸ்பெக்டரை  பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக  கூறப்படுகிறது. 

கூட்டத்திற்குள் சிக்கி கொண்ட அந்த பெண் போலீசை காவல்துறை அதிகாரி தகாத இடங்களில் தொட்டு உள்ளார். இந்த வீடியோ கோவை காந்திபுரம் சிக்னல் அருகே எடுக்கபட்டு உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

இதனையடுத்து பெண் எஸ்.ஐயிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக உதவி ஆணையரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மேலும்  காவல் உதவி ஆணையர் ஜெயராமனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்.  உதவி ஆணையர் ஜெயராமன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது பற்றிய வீடியோ வெளியானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்