தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்களிக்க கூடுதல் ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்தில் தாக்கல்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க கூடுதல் ஆவணங்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாருஷ்ணன் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்தார்.

Update: 2017-08-14 07:54 GMT
சென்னை

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரும் அவசர சட்ட மசோதாவை உடனடியாக மத்திய அரசிடம் தாக்கல் செய்வது என்றும் இதற்காக தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழக    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட இயக்குனர் செந்தில்ராஜ், தமிழ்நாடு மருத்துவ சேவை கழக மேலாண்மை இயக் குனர் உமாநாத், சட்டத் துறை செயலாளர் பூவலிங் கம் ஆகியோர் நேற்று மாலை 6 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.  அவர்கள் அவசர சட்டத்துக்கான வரைவு மசோதாவை தயார் செய்து  எடுத்துச் சென்றனர்.

இன்று காலையில் அவர்கள் மத்திய உள்துறை மந்திரி, மத்திய சுகாதாரத் துறை மந்திரி உள்ளிட்டவர்களை சந்தித்து, அவசர சட்டத்துக்கான வரைவு மசோதாவை  கொடுத்து அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலி யுறுத்தினர்.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் கொடுக்கப் பட்ட அவசர சட்டத்துக்கான வரைவு மசோதாவை மத்திய உள்துறை  அமைச்சகம் ஆய்வு செய்தது. நீட் தேர்வில் இருந்து தமிழ கத்துக்கு விலக்கு அளிக்க இந்த ஆவணங்கள் போதாது. கூடுதல் ஆவணங்கள் தேவை என்றும் அவற்றை தாக்கல் செய்யுமாறும் சுகா தாரத்துறை செயலாளர் ராதாருஷ்ணனிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

இதையடுத்து  கூடுதல் ஆவணங்களை சமர்ப் பிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறுகையில், “இன்று பிற்பகலில் கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.

இதை தொடர்ந்து இன்று மதியம் சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தார்.

வரைவு மசோதா மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அவசர சட்டம் உடனடியாக வெளியிடப்படும்.  இதன் மூலம் பல மாதங் களாக நீடித்த ‘நீட்’ பிரச் சினை முடிவுக்கு வர உள் ளது.

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்து விட்டால் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் ‘கட்ஆப்’ மார்க் கணக்கிடப்பட்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 17-ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்