நீட்’ தேர்வு விவகாரத்தில் 2 நாளில் முடிவு தெரியும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேட்டி
‘நீட்’ தேர்வு விவகாரத்தில் 2 நாளில் முடிவு தெரியும் என்பதால் மாணவர்கள் குழப்பம் அடைய தேவையில்லை என்று அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறினார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதற்கு சிலர் பலியாகி உள்ளனர். டெங்கு காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று சேலம் வந்தனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தொடங்கிவைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த புகைதெளிப்பான் கருவிகளை ஆய்வு செய்தார். அமைச்சர் தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை, கேரளாவை தொடர்ந்து தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது. இதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சேலம் மாவட்டத்தில் இன்னும் 10 நாட்களில் காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்திவிடுவோம். காய்ச்சல் பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘நீட்’ தேர்வு விவகாரத்தில் சட்ட சிக்கல்கள் உள்ளன. கடந்த ஆண்டு விதிவிலக்கு பெற்றதை போன்று நடப்பு ஆண்டும் பெற ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ‘நீட்’ தேர்வு பிரச்சினையில் தமிழக அரசு சார்பில் உச்சக்கட்ட அழுத்தத்தை மத்திய அரசிடம் கொடுத்து இருக்கிறோம். இதுதொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த பிரச்சினையில் தமிழக அரசு கடைசி வரை போராடும். ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் இன்னும் 2 நாளில் முடிவு தெரியும். இதனால் மாணவர்கள் குழப்பம் அடைய தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.