அதிவேகமாக செல்லக்கூடிய பஸ், லாரிகளை உற்பத்தி செய்ய ஏன் தடை விதிக்கக்கூடாது? மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி
அதிவேகமாக செல்லக்கூடிய பஸ், லாரிகளை உற்பத்தி செய்ய ஏன் தடை விதிக்கக்கூடாது? மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை,
அதிவேகமாக செல்லும் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை உற்பத்தி செய்வதை ஏன் தடை செய்யக்கூடாது? என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அதிவேகமாக சென்ற இரு பஸ்கள் மோதியதில் 2 பேர் பலியானார்கள். 29 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கும், படுகாயம் அடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்க மாநில அரசு போக்குவரத்து கழகத்துக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், போக்குவரத்து கழகம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
இரு பஸ்களின் டிரைவர்களும் வேகமாக ஓட்டியதால் விபத்து நடந்துள்ளது. மத்திய மோட்டார் வாகன சட்டம் வாகனங்கள் எவ்வளவு வேகமாக செல்ல வேண்டும் என்பதை வரையறை செய்துள்ளது. அதில், கார் போன்ற இலகுரக வாகனங்களுக்கு வேகம் நிர்ணயிக்கப்படவில்லை.
பஸ்கள், லாரிகள் குறிப்பிட்ட வேகத்தில் தான் செல்லவேண்டும் என்று சட்டம் நிர்ணயம் செய்திருக்கும்போது, அந்த வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், அதிவேகமாக செல்லக்கூடிய வாகனங்களை எப்படி தயாரிக்கின்றன? எனவே, வாகனத்தை உற்பத்தி செய்யும்போதே, சட்டம் நிர்ணயித்துள்ள வேகத்தை கொண்ட வாகனங்களையே உற்பத்தி செய்யவேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்களை தான் உற்பத்தி செய்யவேண்டும் என்ற நிபந்தனையை அமல்படுத்த முடியுமா? என்பதை தமிழக போக்குவரத்து துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும். மேலும், அதிவிரைவாக செல்லக்கூடியே மோட்டார் சைக்கிள்கள், கார்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால், அந்த வாகனங்களை ஓட்டுபவருக்கு மட்டுமல்ல, சாலையில் செல்பவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
மத்திய நிதித்துறை செயலாளரையும் இந்த வழக்கில் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கின்றேன். வெளிநாட்டு மோட்டார் சைக்கிள்கள், கார்கள், எந்த நோக்கத்துக்காக இறக்குமதி செய்யப்படுகிறது? என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும். வெளிநாடுகளில் ஓட்டுவதற்கு தகுதியில்லாத வாகனங்களை, நம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதாக கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்களே தகுதியற்றது என்று முடிவு செய்த பின்னர், எதற்காக இந்தியர்கள் அந்த வாகனங்களை வாங்கவேண்டும்?
மேலும், ஒவ்வொரு வாகனங்களிலும் வேகக்கட்டுப்பாட்டு கருவியை ஏன் பொருத்தக்கூடாது? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு கேட்டிருந்தது. தற்போது, அதிவேகமாக செல்லக்கூடிய பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களை தயாரிக்க ஏன் தடை விதிக்கக்கூடாது? என்பதற்கும் பதிலளிக்க வேண்டும்.
இதற்கு 21–ந் தேதி பதிலளிக்கும் விதமாக, விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். அதற்குள் தாக்கல் செய்யாவிட்டால் தமிழக போக்குவரத்து செயலாளர், மத்திய நிதித்துறை செயலாளர் 22–ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.