விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும்; விஜயகாந்த் வலியுறுத்தல்

தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

Update: 2017-03-04 16:45 GMT

சென்னை,

இயற்கையின் அனைத்து வளங்களும் இருக்கக்கூடிய நம்நாட்டில், உணவுப்பொருட்கள், பிற அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. விலைவாசி உயர்வினால் பாதிக்கப்படுவோர் ஏழை மக்களே. விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த சரியான திட்டங்களை அரசு நடைமுறைபடுத்தும் நிர்வாக அமைப்பு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. பெட்ரோல் விலை மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலை அடிக்கடி அதிகரிப்பதால் மற்ற பொருட்களின் விலை உயர்வடைகிறது.

மக்களின் தேவைக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்ய ஆக்கபூர்வமான திட்டங்கள் தீட்டி செயல்படுத்தாத நிலையில் அரசு உள்ளது. மாநகராட்சி, நகராட்சி அருகில் உள்ள கிராமங்களில்,விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளதால், காய்கறிகளின் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கூடாமல் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்