போதைப்பொருள் வழக்கில் தண்டனை அனுபவித்த நைஜீரிய வாலிபர் போலீஸ் அலுவலக மாடியில் இருந்து குதித்து தப்பி ஓட்டம்
போதைப்பொருள் வழக்கில் தண்டனை அனுபவித்த நைஜீரிய வாலிபர் போலீஸ் அலுவலக மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.
மும்பை,

நைஜீரிய வாலிபர்
நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் ஜான் கென்னடி சுக்கோவா இமேகா(வயது35). நவிமும்பை வாஷியில் வசித்து வந்த இவர், போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு கோர்ட்டு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.
இதையடுத்து ஜான் கென்னடி சுக்கோவா இமேகா நாசிக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரது சிறை தண்டனை கடந்த மாதம் 31-ந்தேதியுடன் முடிவடைந்தது.
தப்பி ஓட்டம்
இதையடுத்து ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்ட அவரை நைஜீரிய நாட்டிற்கு அனுப்புவதற்காக போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் மும்பை அழைத்து வந்தனர். பின்னர் அவரை ஆசாத் மைதானில் உள்ள தங்களது அலுவலகத்தின் முதல் மாடியில் உள்ள அறையில் தங்க வைத்து இருந்தனர்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென ஜான் கென்னடி சுக்கோவா இமேகா மாடியில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை பிடிப்பதற்காக விரட்டிச் சென்றனர். ஆனால் அவர் இருளில் மறைந்து தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.