மதுரையில் சிதிலமடைந்த நிலையில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்கோவில் - தூய்மைப்படுத்திய தன்னார்வ குழுவினர்
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோவிலை சீரமைக்கும் முயற்சியில் ஊராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது.
மதுரை,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில், சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்கோவில் ஒன்று சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. இந்த கோவிலை புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இக்கோவிலை சீரமைக்கும் முயற்சியில் ஊராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது. இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த தன்னார்வ உழவார திருப்பணி குழுவினர், கோவிலைச் சுற்றி வளர்ந்திருர்ந்த புதர்கள், செடி, கொடிகளை அகற்றி கோவிலை தூய்மைப்படுத்தினர்.