தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கிட வேண்டும் - போக்குவரத்துத்துறைக்கு ஊழியர்கள் கடிதம்

தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கிட வேண்டுமென போக்குவரத்து ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

Update: 2023-10-12 13:47 GMT

சென்னை,

தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கிட வேண்டுமென போக்குவரத்துத்துறைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் ,

கடந்த ஆண்டுகளில் கொரோனாவை காரணம் காண்பித்து 20 சதவீத போனசை 10 சதவீதமாக குறைத்ததை இந்த ஆண்டு செய்யக் கூடாது. போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தற்பொழுது அழைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன் பணமாக ரூ.10,000 வழங்க வேண்டும் என போக்குவரத்து துறைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்