ஆங்கில புத்தாண்டில் 20 குழந்தைகள் பிறந்தன

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஆங்கில புத்தாண்டில் 20 குழந்தைகள் பிறந்தன

Update: 2023-01-01 16:10 GMT


திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி இங்கு பல்வேறு அவசர சிகிச்சைகள், அறுவை சிகிச்சைக்கள் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் சுக பிரசவமாகவும், அறுவை சிகிச்சையின் மூலமும் 30 முதல் 40 குழந்தைகள் பிறக்கின்றன.

2023-ம் ஆங்கில புத்தாண்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது.

இந்த புத்தாண்டு பிறப்பு முதல் நாளான இன்று மாலை 5 மணி வரை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 20 குழந்தைகள் பிறந்துள்ளது என்று மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்