அண்ணன்-தம்பியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

அண்ணன்-தம்பியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-10-27 00:50 IST

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தை அடுத்த வெடலாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 46). இவருக்கும் கூத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சீனிவாசன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது அண்ணன் சுரேஷ்பாபுவுடன் பாணாவரத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது ராஜேஷ் தனது நண்பர்களான அஜித் (20), சந்தோஷ் (19), சாரதி ஆகியோருடன் சேர்ந்து அவர்கள் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சீனிவாசன், சுரேஷ்பாபு ஆகிய இருவரும் வாலாஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இதுகுறித்து சீனிவாசன் பாணாவரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித், சந்தோஷ் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்