2 வாலிபர்கள் கைது
பெண்ணிடம் நகை பறித்தது தொடர்பாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பணகுடி:
பணகுடியை அடுத்த தளவாய்புரத்தை சேர்ந்த கண்ணன் மனைவி வள்ளியம்மாள் (வயது 52). இவர் கடந்த 11-7-2022 அன்று வெளியே வந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், திடீரென்று வள்ளியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் வழக்குப்பதிவு செய்து, மஞ்சாங்குளத்தை சேர்ந்த மாயாண்டி மகன் நம்பிநாராயணன் (24), பாளையங்கோட்டையை சேர்ந்த ரத்தினம் மகன் அருண்பாண்டியன் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து திருட்டு போன 4 பவுன் தங்க சங்கிலி மீட்கப்பட்டது. தொடா்ந்து, 2 பேரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.