கட்டிட தொழிலாளிக்கு 2 ஆண்டு ஜெயில்

விபத்தில் பச்சிளம் குழந்தை இறந்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-09-05 20:15 GMT

சேலம் அருகே டால்மியா போர்டு பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி தன்னுடைய மனைவி பாரதி, 1½ மாத பச்சிளம் குழந்தை யாழினி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். மாமாங்கம் பகுதியில் சென்ற போது முனுசாமி என்பவரது மோட்டார் சைக்கிள், வாசுதேவன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வாசுதேவன் உள்பட 3 பேரும் காயம் அடைந்தனர். இதில் பச்சிளம் குழந்தை யாழினி பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் முனுசாமியை கைது செய்தனர். இந்த வழக்கில் சேலம் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் முனுசாமிக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி கிறிஸ்டல் பபிதா தீர்ப்பு அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்