வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்

வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்-தேவகோட்டை கோர்ட்டு தீர்ப்பு

Update: 2022-06-22 19:39 GMT

தேவகோட்டை

தேவகோட்டையை அடுத்த கண்ணங்குடி அருகே உள்ள வலையன்வயல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது 68). விவசாயி. அதே கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன்(45). அந்த கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு புகார் சென்றது. புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழ்நிலையில் சுப்பையா தான் தகவல் கொடுத்திருப்பார் என சந்தேகம் அடைந்த அர்ஜூனன் கடந்த 2015-ம் ஆண்டு சுப்பையாவை தாக்கினார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார், அர்ஜூனன் மீது வழக்குப்பதிவு செய்து தேவகோட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி மாரிமுத்து குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுனனுக்கு 2 ஆண்டு 1 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்