கிராவல் மண் அள்ளி சென்ற 2 லாரிகள் பறிமுதல்

கிராவல் மண் அள்ளி சென்ற 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2023-09-24 23:37 IST

அரிமளம் அருகே ஆனைவாரி கிராம கண்மாய் பகுதிகளில் டிப்பர் லாரிகளில் கிராவல் மண் எடுத்துச் செல்வதாக அரிமளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நேற்று சம்பந்தப்பட்ட பகுதிகளில் அரிமளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 டிப்பர் லாரிகளிலும் சுமார் 11 யூனிட் கிராவல் மண் அனுமதியின்றி எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 2 டிப்பர் லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவர்கள் குளத்துப்பட்டி செங்கமளத்தை சேர்ந்த சங்கர் (43), பீர்க்கலைகாடு அரண்மனையை சேர்ந்த ரகுபதி (29) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்