மினி லாரியுடன் 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருவெண்ணெய்நல்லூர் அருகே மினி லாரியுடன் 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் வாலிபர் கைது

Update: 2022-10-15 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை செட்டி தெருவில் திருச்சி முத்துராஜா தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் ராம்குமார்(வயது 26). இவர் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி சேகரித்துக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படையை சேர்ந்த போலீஸ்காரர்கள் மணிகண்டன் மோகன்தாஸ் ஆகியோர் பொதுமக்களிம் ரேஷன்அரிசியை சேகரித்துக்கொண்டிருந்த ராம்குமாரை கையும், களவுமாக பிடித்தனர். விசாரணையில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி திருச்சியை சேர்ந்த புரோக்கர் சாதிக்பாஷா என்பரிடம் விற்பதற்காக கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ராம்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மினி லாரியுடன் 2½ டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்