அரசு பஸ் மோதி மோட்டார்சைக்கிளில் சென்ற 2 பேர் பலி
பூவந்தி அருகே அரசு பஸ் மோதி மோட்டார்சைக்கிளில் சென்ற 2 பேர் பலியாகினர்.;
அரசு பஸ் மோதல்
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிகேசவன்(வயது 23). இவர் மதுரை விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று ஆதிகேசவனும், அவருடைய நண்பரும் மோட்டார் சைக்கிளில் மதுரையில் இருந்து மாத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அதேபோல் தொண்டியில் இருந்து மதுரை நோக்கி அரசு புறநகர் குளிர்சாதன பஸ் வந்து கொண்டிருந்தது. பூவந்தி அடுத்த குயவன்குளம் விலக்கு அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக அரசு பஸ்சும், மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
2 பேர் பலி
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து அறிந்த பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் மற்றும் போலீசார் அங்கு சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.