போலி துப்பறியும் நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றிய 2 பேர் கைது

போலி துப்பறியும் நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-08 19:26 GMT

திருச்சி மாவட்டத்தில் போலியான துப்பறியும் நிறுவனம் மூலம் ஏமாற்றப்பட்டதாக முசிறியை சேர்ந்த ஒருவர் திருச்சி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருச்சியில் உள்ள சிந்தனைபுரம் மற்றும் எடமலைபட்டிப்புதூர் ஆகிய இடங்களில் கூகுள் பிசினஸ் மூலம் திருச்சி டிடெக்டிவ் ஏஜென்சி என்ற பெயரில் போலியான துப்பறியும் நிறுவனம் நடத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, போலி நிறுவனம் நடத்தி பொது மக்களை ஏமாற்றிய கள்ளக்குறிச்சியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 31) மற்றும் வசந்த் (24) ஆகிய 2 பேரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்