லாட்டரி விற்ற 2 பேர் கைது

லாட்டரி விற்ற 2 பேர் கைது

Update: 2023-06-17 18:45 GMT

சிவகாசி,

சாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் நகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு தியேட்டரின் வெளியே 45 வயது மதிக்கத்தக்க நபரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த நபரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்த மைதீன்பாட்சா(வயது 45) என தெரியவந்தது. இவர் வெள்ளை தாளில் எண்களை எழுதி கேரள லாட்டரி என்று கூறி விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து எண்கள் எழுதப்பட்ட வெள்ளை காகிதங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ரோந்து பணியின் போது லாட்டரி விற்றதாக நாகூர்அம்மா (62) என்பவரை கைது செய்தார். இவரிடம் லாட்டரி விற்ற ரொக்க பணம் ரூ.30 ஆயிரத்து 300 இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்