பொள்ளாச்சி
பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஜபீர் (வயது 57) என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 348 லாட்டரி சீட்டுகள், ரூ.1,200, ஒரு மொபட் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரி அருகில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக கோமங்கலம் போலீசார் கேரளாவை சேர்ந்த ஜாபர் (54) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 105 லாட்டரி சீட்டுகள், ரூ.390 பறிமுதல் செய்யப்பட்டது.