2 பேர் படுகாயம்

மாநகராட்சி வாகனத்தில் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-08-28 19:50 GMT

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சியில் துப்புரவு பிரிவில் டிரைவராக பணியாற்றி வருபவர் கொத்தாளமுத்து (வயது 53). இவர் சம்பவத்தன்று இரவு மாநகராட்சிக்கு சொந்தமான டிப்பர் லாரியில் குப்பைகளை அள்ளிக்கொண்டு சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள பாறைப்பட்டி குப்பை கிடங்கில் கொட்ட சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மாநகராட்சி வாகனத்தின் மீது மோதியது. இதில் வாகனத்தை ஓட்டி வந்த மீனம்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜான்குமார் (23), பின்னால் அமர்ந்திருந்த திடீர் நகரை சேர்ந்த பால முருகன் (23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து கொத்தாளமுத்து கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்