சாராயம் விற்ற 2 பேர் கைது
திமிரி அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திமிரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திமிரியை அடுத்த எம்.என்.பாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 55), கருங்காலிகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜா (70) ஆகிய இருவரும் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.