மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-21 19:48 GMT

விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் தேராவூர் மற்றும் அகரப்பட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேராவூர் மேட்டுப்பட்டி பகுதியில் மதுவிற்று கொண்டிருந்த கள்ளம்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் கொடும்பாளூர் லஞ்சமேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மது விற்ற கிருஷ்ணன் (37) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 37 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்