ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த சின்னவளையம் பஸ் நிறுத்தம் அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 2 பேர் பதுக்கி வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அவர்கள் சின்னவளையம் தெற்கு தெருவை சேர்ந்த சுரேஷ்குமார்(வயது 40) மற்றும் மணக்கரை கீழத்தெருவை சேர்ந்த கொளஞ்சி(39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.