மது விற்ற 2 பேர் கைது
வருசநாடு அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
வாலிப்பாறை, பூசணூத்து உள்ளிட்ட கிராமங்களில் வருசநாடு போலீசார் ரோந்து சென்றனர். இதில் வாலிப்பாறை கிராமத்தில் காளியம்மன் கோவில் அருகே நின்று மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முத்து (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் பூசணூத்து கிராமத்தில் மயானம் அருகே மதுபாட்டில்கள் விற்ற கொடியரசன் (62) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.