வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

ராமநாதபுரம் அருகே வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-30 16:58 GMT

ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன்வயல் பகுதியை சேர்ந்த அழகிரி பாலன் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்குச் சென்று வாள் கத்தியை காட்டி மிரட்டி தாக்கியதாக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராமநாதபுரம் ஆர்.எஸ். மடையை சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் முவின் என்ற முவின் குமார் (வயது 23) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த வினிதா என்பவரை வீடு புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வாள் கத்தியை காட்டி மிரட்டியதாக அவர் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில்தலைமறைவாக இருந்த ராமநாதபுரம் நீலகண்ட பிள்ளை தெருவை சேர்ந்த தியாகராஜன் மகன் கார்த்திக் என்ற கார்த்திகேயன் (28) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்