சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
மயிலாடுதுறை அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்
மயிலாடுதுறை அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் விசாரணை
மயிலாடுதுறை திருவிழந்தூர் தீப்பாய்ந்த அம்மன் கோவில் அருகே சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதன்பேரில் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது காவிரிக்கரையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருவிழந்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முத்து மகன் அபினேஷ் (வயது 21) என்பது தெரியவந்தது.
2 பேர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபினேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மயிலாடுதுறை அருகே நீடூர் கணபதி ஆற்றங்கரை தெருவில் சாராய விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ராணி (65) என்பவரை போலீசார் கைது செய்தனர்.