கார் மோதி முதியவர் உள்பட 2 பேர் படுகாயம்

கார் மோதி முதியவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-07-12 17:54 GMT

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள கைகளத் தெருவை சேர்ந்தவர் வடிவேல்(வயது 65). இவரது உறவினர் கடலங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் குமார் மகன் குமரேசன்(27) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் மீன்சுருட்டியை நோக்கி தனது சொந்த வேலையாக சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மெய்காவல் புத்தூர் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வடிவேல், குமரேசன் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வடிவேலையும், குமரேசனையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து வடிவேல் உறவினர் வெங்கடேசன்(43) கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை அன்னல் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த முருகன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்