திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலி

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர். மற்றொரு பெண் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2023-10-06 09:16 GMT

ஆந்திர மாநிலம் நகரி மாவட்டத்தை சேர்ந்தவர்வர்கள் ஆறுவேல் (வயது 45), காஞ்சனா (55), சௌரியம்மாள் (48). இவர்கள் மூன்று பேரும் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தனர்.

நேற்று தமிழக எல்லையில் அமைந்துள்ள பொன்பாடி கிராமத்தில் கட்டிட வேலை செய்தனர். மாலை வேலை முடிந்ததும் ஆறுவேல் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் காஞ்சனா, சௌரியம்மாளை ஏற்றிக்கொண்டு ஆந்திராவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பொன்பாடி சோதனை சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் ஆறுவேலின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மூன்று பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த ஆறுவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து விரைந்து சென்ற திருத்தணி போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காஞ்சனா, சௌரியம்மாளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி காஞ்சனா பரிதாபமாக உயிரிழந்தார். சௌரியம்மாளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் வண்டியை அங்கே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர். வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் போது கார் மோதியதில் கூலி தொழிலாளிகள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் திருத்தணியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்