பிளஸ்-2 மாணவி உள்பட 2 பேர் மாயம்

சின்னசேலம் அருகே பிளஸ்-2 மாணவி உள்பட 2 பேர் மாயம்

Update: 2023-04-12 18:45 GMT

சின்னசேலம்

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செபஸ்டியன் மகள் அனுசியா(வயது 20). இவர் சம்பவத்தன்று தனது உறவினர்களுடன் சின்னசேலத்தை அடுத்த மேல்நாரியப்பனூர் கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் திருத்தலத்திற்கு வந்து இரவு அங்கேயே தங்கினார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அனுசியாவை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன அனுசியாவை தேடி வருகின்றனர்.

இதேபோல் சின்னசேலத்தை அடுத்த பெரிய சிறுவத்தூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் மகள் அஸ்விதா(17). பிளஸ்-2 மாணவியான இவர் தற்போது சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் நீட் பயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று நீட் பயிற்சிக்காக சென்ற அஸ்விதா வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்