8 பவுன் நகை திருடிய 2 பேர் சிக்கினர்

8 பவுன் நகை திருடிய 2 பேர் சிக்கினர்

Update: 2023-05-17 20:33 GMT


மதுரை ஆனையூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 54). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் என 8 பவுன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர் கூடல்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர். இதையடுத்து நகை திருடியதாக தெப்பக்குளம் மருது பாண்டியர் தெருவை சேர்ந்த மருதுபாண்டி (28), அண்ணாநகர் யாகப்பா நகர் அம்மையப்பர் தெரு ராஜ்குமார் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்