தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது

அய்யம்பேட்டை அருகே தொழிலாளி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-08 20:27 GMT

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே தொழிலாளி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அடித்துக்கொலை

அய்யம்பேட்டை அருகே பெருமாக்கநல்லூர் தெற்கு குடியானத்தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 58). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவருடைய உறவினர்கள் சாலியமங்கலத்தில் உள்ள குல தெய்வ கோவிலில் கிடா வெட்டு பூஜை நடத்தினர். அப்போது அங்கு நடந்த கறி விருந்தில் சங்கரின் மகன் கார்த்திக்கும், அவரது உறவினரான அதே ஊரை சேர்ந்த அருண் (25) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகில் உள்ளவர்கள் அவர்களைசமாதானம் செய்துவைத்தனர்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் சென்று விட்டனர். அன்று நள்ளிரவில் இருதரப்பினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. கார்த்திக்கிற்கு ஆதரவாக பேசிய அவரது தந்தை சங்கரை அருண் மற்றும் அவரது உறவினர் செல்லப்பா (48) ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்றனர்.

2 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அருண், செல்லப்பாவை தேடி வந்தனர்.

இந்நிலையில் அருண், செல்லப்பா இருவரும் அய்யம்பேட்டை அருகே நல்லிச்சேரி பிரிவு சாலை அருகே நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்