குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

சேரன்மாதேவியில் குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-01 19:36 GMT

நெல்லை அருகே உள்ள மேல பத்தமடை மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் பாஸ்கர் (வயது 25), கீழமுன்னீர்பள்ளம் அம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் அருண்பாண்டி (22). இவர்கள் இரண்டு பேரும் சேரன்மாதேவி பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டதால் சேரன்மாதேவி போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அடிதடி, கொலை முயற்சி மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் பரிந்துரை செய்தார். கலெக்டர் கார்த்திகேயன் இதனை ஏற்று 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சேரன்மாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று சமர்ப்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்