பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி தபால் தந்தி காலனி அருகே வந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதாக ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சிவா மகன் முத்தண்ணா (வயது 21), கொம்பையா மகன் சுடலைக்கண்ணு (24) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.