லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
திருக்கோவிலூரில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், ராஜசேகரன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையிலும், திருக்கோவிலூர் பஸ் நிலையம் அருகிலும் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த சுப்பிரமணி சேகர் (வயது 67), ராஜா(48) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1600 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.