கோவை
கோவை காட்டூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி மற்றும் கோவில் அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்த வேலந்தாவளம் கருப்ப கவுண்டர் தெருவை சேர்ந்த மூசா (வயது 43) மற்றும் உக்கடம் கோட்டை மேட்டை சேர்ந்த காதர் பாஷா (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 24 லாட்டரி சீட்டுகள், ரூ.4,550 பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.